Wednesday, 3 June 2020

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்.....

குருக்ஷேத்திரப் போரில் சிகண்டியால் வீழ்த்தப்படும் பீஷ்ம பிதாமகர், #உத்தராயண_புண்ணிய_காலத்தில் உடலைத் துறக்க விருப்பம் கொண்டவராக, #அர்ஜுனன்_தன்_கணைகளால் உருவாக்கிய அம்புப் படுக்கையில் படுத்துக்கொள்கிறார்.

போரின் இறுதியில் கௌரவர்கள் வீழ்த்தப்படுகின்றனர். வெற்றி பெற்ற பாண்டவர்கள், ஆசி பெறுவதற்காக பீஷ்ம பிதாமகரிடம் வருகின்றனர். பீஷ்மர் அவர்களை ஆசிர்வதிக்கிறார்.

#யுதிஷ்டிரர்_பீஷ்மரிடம், ‘’தங்கள் அன்பாலும் ஆசிகளாலும்தான் எங்களால் போரில் வெற்றி அடைய முடிந்தது. இனி ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகும் எங்களுக்கு தாங்கள்தான் தர்மநெறிகளை உபதேசிக்கவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.

யுதிஷ்டிரர் வேண்டிக் கொண்டபடியே பீஷ்மர் அவர்களுக்கு தர்ம நெறிகளை உபதேசிக்கத் தொடங்கியபோது, #திரௌபதி_சிரித்துவிட்டாள். அசந்தர்ப்பமான சூழலில் திரௌபதி அப்படி சிரித்ததைக் கேட்ட #யுதிஷ்டிரர், ‘‘எதற்காக சிரித்தாய்?’’ என்று கோபத்துடன் கேட்டார். யுதிஷ்டிரரை சாந்தப்படுத்திய பீஷ்மர்,  அதே கேள்வியை திரௌபதியிடம் கேட்டார்.

‘‘அன்று துரியோதனன் சபையில் நான் அவமானத்துக்கு உள்ளானபோது, அந்த அநியாயத்தைத் தடுக்காமல் இருந்த தங்களிடம் தர்ம நியாயங்களை உபதேசிக்குமாறு கேட்டதும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். அன்பு கூர்ந்து மன்னியுங்கள்’’ என்றாள் திரௌபதி.

பீஷ்மர், ‘‘#துருபதன்_மகளே, நீ அப்படி நினைத்துச் சிரித்ததில் தவறு இல்லை. இங்கே உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அன்று #துரியோதனன் சபையில் உனக்கு அநீதி இழைக்கப்பட்டபோது நான் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்ததற்குக் காரணம், அப்போது என்னுடைய உடலில் ஓடிய ரத்தம் #துரியோதனன்_தந்த_உணவால்_உண்டானது. அதனால்தான் என்னால் அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடிய வில்லை. ஆனால், இப்போது போர்க்களத்தில் #என்னுடைய_உடலில்_துளைத்த_அம்புகள்_அத்தனை_ரத்தத்தையும்_வெளியேற்றிவிட்டன. எனவே, இப்போது நான் தர்மநியாயங்களை உபதேசிப்பதில் தவறு இல்லைதானே?’’ என்று கேட்க, அவசரப்பட்டு சிரித்ததற்காக #பீஷ்மரிடம் மன்னிப்பு கேட்ட திரௌபதி,  தானும் அவருடைய உபதேசங்களைக் கேட்கக் காத்திருப்பதாக கூறினாள்.

பீஷ்மர், பாண்டவர்களுக்கு தர்மநியாயங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார்.  பின்னர் இறுதியாக, #கலியின்_துன்பங்களை எல்லாம் போக்கும் அதிஅற்புதமான #ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். அதுதான் #விஷ்ணுசஹஸ்ரநாம_ஸ்தோத்திரம். பகவானின் ஆயிரம் நாமங்களின் மகிமைகளை பாண்டவர்களுக்கு உபதேசித்த பீஷ்மர், "அந்த பகவான் வேறு யாரும் இல்லை. உங்களுக்கு சதாசர்வ காலமும் உற்ற துணையாக இருக்கும் #கிருஷ்ணரே..!" என்றும் விளக்கினார்.

நண்பர்களே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய... நமக்குத் தெரியாத மற்றுமொரு புண்ணிய கதையும்
உண்டு. அது...
***
#ஸ்படிக_மாலை_செய்த_அற்புதம்!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; பின் தர்மம் வெல்லும்’ என்ற உயரிய உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தமே குருக்ஷேத்திரப் போர். தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்கள் பக்கம் நின்று, தேரோட்டியாகப் பணி புரிந்து, தனது கடமையைச் செய்துகொண்டிருந்தான் அவதார புருஷனான #ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மர், துரோணர், கிருபர் முதலான பெரியோர்கள் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்காக, தீயோன் என்று தெரிந்தும் #துரியோதனன் பக்கம் நின்று, பாண்டவர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர்.

கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிய பீஷ்மர், 10-ம் நாள் போரில் #அர்ஜுனனின் அஸ்திரங்களால் வீழ்த்தப்பட்டார். தான் விரும்பியபோது மரணம் அடையலாம் என்று வரம் பெற்றிருந்த அவர், அம்புகளையே படுக்கையாக்கிக்கொண்டு, உத்தராயனம் வரும்வரை அதன்மீது படுத்திருந்தார். தீயவர்களின் உப்பைத் தின்று வளர்ந்த தன் உடம்பிலிருந்து உதிரத் துளிகள் மொத்தமாக பூமியில் சிந்தி, உடல் முழுவதும் புனிதப்படுவதற்காக, அவர் இந்த அஸ்திரப் படுக்கை எனும் சாதனையை மேற்கொண்டார். கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் #தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில்,  பகவான் #கிருஷ்ணனையும் அவர் கண்டார். #ஸ்ரீமந்_நாராயணனே பகவான் #ஸ்ரீகிருஷ்ணனாக_பூமியில்_அவதரித்திருந்த_உண்மையை_பீஷ்மர்_உணர்ந்திருந்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் #விஸ்வரூப_தோற்றமும், அதிyல் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே '#ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ர_நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங

ஸ்ரீமந் நாராயணனின் #விஸ்வரூப_தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே '#ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ர_நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங

Thursday, 26 December 2019

https://m.facebook.com/100000453642102/posts/3769108513114233/?notif_id=1577330769888623¬if_t=close_friend_activity&ref=notif&sfnsn=wiwspmo&extid=hDbz3bdcpv1syuid

Wednesday, 2 October 2019

ஏமாற்றம் மானிடத் தத்துவம்

ஏமாறுகிறவர் இருப்பதால் ஏமாற்றுபவன் இருக்கிறானா, அல்லது ஏமாற்றுகிறவன் இருப்பதால் ஏமாறுகிறவர் இருக்கிறாரா?

ஏமாறுவோர் இருப்பதால்தான் ஏமாற்றுவோர் இருக்கிறார். ஏமாற்றம் எனும் மரத்திற்கு, வேர் - ஏமாறுவோர்; கிளையும், இலையும், கனியும் – ஏமாற்றுவோர். வேர் நீரை உரிஞ்சுகிறது; பலனோ இலைக்கும் கனிக்கும்.

ஏமாற்றம் எனும் செயலுக்கு, செய்பவர் மற்றும் செய்யப்படுபவர் என ‘இருவர்’ வேண்டும். ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை. ‘நீயின்றி நான் இல்லை’ என்பது போல்.

ஏமாறுவது நலமா? எனில், ஆம்; நலம்தான்! அதில் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது, மீண்டும் அதே மாதிரி ஏமாறாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது. ஒரு முறை ஏமாந்த பின், மீண்டும் மீண்டும் அதே மாதிரியே ஏமாறுவோர் நிலைதான் பரிதாபம். அதாவது வாக்காளர்கள் மாதிரி! ஏமாறும் வாக்காளர் இருக்கும் வரையில் ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. ஏமாறுவோரும், எல்லா நேரத்திலும் ஏமாற மாட்டார்கள்.

சில நேரங்களில், வேண்டும் என்றே கூட ஏமாறலாம். அது எதற்கு உபயோகப்படும் என்றால், எதிரில் இருப்பவரின் குண நலன்களை எடுத்துக் காட்டுவதற்கு உதவும்.

சின்ன மீனைப் பிடித்தால்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும். அதைப் போல், சின்ன முள்ளில் மாட்டி வெளிவந்தால்தான், பெரிய முள்ளில் மாட்டாமல் தப்பிக்கலாம். அதற்காக பட்டறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று, எப்போதும் பெரிய முள்ளிலேயே மாட்டினால் அது அவரவர் புத்திசாலித்தனத்தை பொருத்தது.

மாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஏமாற்றம் என்பதோ மனிதன் உபயோகிக்கும் மலிவான யுக்தி. இது என்னவோ மனிதன் மட்டும் உபயோகிக்கும் யுக்தி அன்று. மிருகங்களும் இந்த யுக்தியைப் புரிகின்றன. என்ன வித்தியாசம்? எனில், மிருகங்கள் தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சிக்கு அதைப் புரிகின்றன. மிருகங்கள் புரியும் ஏமாற்று செயல், மற்ற மிருக இனத்தின் மேல்தான் இருக்கும். மனிதனோ, தான் வசதியாய் வசிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறான்; அதுவுன் தன் சக மனித இனத்தின் மேலேயே! மனிதனுக்குதான் ஆறாம் அறிவு இருக்கிறதே! அது, வேறு எதற்கு இருக்கிறதாம்? இதற்குத்தான்!

Monday, 24 July 2017

பக்தியுடன் வழிபடுவோர்க்கு, முக்தியை வழங்கும், ஆனந்த மயமான இறைவன் நாராயணராகிய பெருமாள், ஆழ்வார்களுக்கு முக்தியளித்து அருளாட்சி செய்து வரும் அற்புத திவ்ய தேசங்களின் வரலாறு, செல்லும் வழி, தரிசன நேரம், ஆகிய அனைத்து தகவல்களும் அடங்கிய இச்செயலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பக்தி மனம் கமழும் இச்செயலியை தங்களுக்கும் பகிர்கிறேன். இறையுணர்வோடு அனுபவியுங்கள். https://play.google.com/store/apps/details?id=com.coderays.divyadesam

Thursday, 26 January 2017

பல குழந்தைகள் விழுந்து விழுந்து படித்தாலும்  நியாபக மறதியால்  தோ்வில் எழுத விட்டுவிடுவார்கள்..அவா்களுக்கு இம்மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள்.  பள்ளிக்குச் செல்லும் முன் 3 முறை சொல்ல வேண்டும்..இம்மந்திரம் படித்ததை மனதில் பதிய வைத்து நியாபக சக்தியை அதிகாிக்கும் என சுகப்பிரம்பரிஷியின் அருள்வாக்கு சொல்கிறது..

ஸ்ரீ வித்யா ரூபிணி ;  சரஸ்வதி ;   சகலகலாவல்லி;
சாரபிம்  பாதரி ;   சாரதாதேவி  ;  சாஸ்திரவல்லி;
வீணாபுஸ்தக  தாரிணி ;   வாணி ;க மலபாணி  ; வாக்தேவி;
வரநாயகி ;  புஸ்தக  ஹஸ்தே;   நமோஸ்துதே..

Saturday, 24 December 2016

வேதம் அனைத்துக்கும் வித்து

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயி தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

இத்திருப்பவையின் உரை!

நோன்பு நோற்று சுகாநுபவம் உடைய அம்மே! வாசற்கதவைத் திறவாதவர்கள் ஒரு வாய் சொல்லும் கொடுக்க மாட்டாரோ? நறு நாற்றம் வீசாநின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமுடியை உடைய நாராயணனும், நம்மால் மங்களாசாசனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களை தந்தருள்பவனும் தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால் முன் ஒரு காலத்திலே விழுந்தொழிந்த கும்பகர்ணனும் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்கே தான் கொடுத்தானோ? மிகவும் உறக்கம் உடையவளே! பெருதர்க்கரிய ஆபரணம் போன்றவளே!தெளிந்து வந்து கதவைத் திறந்திடு;
என ஆண்டாள் தன் தோழியை எழுப்புகின்றாள்.

Friday, 16 December 2016

ஒரு நிமிட கதை

http://tamil.thehindu.com/opinion/blogs/ஒரு-நிமிடக்-கதை-விழுதுகள்/article9431745.ece